ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்


ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
x
தினத்தந்தி 27 July 2023 6:45 PM GMT (Updated: 27 July 2023 6:46 PM GMT)

கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

கடலூர்

கடலூர் முதுநகர்

கடலூர் முதுநகரில் பிரசித்தி பெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் செடல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான செடல் உற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், இரவு சிவலிங்க பூஜையும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவில் கணேசன், உதயவேலு, சவுந்தர்ராஜன், ராஜ்குமார், பரிமளன், சரவணன் என்ற கந்தபெருமாள், சதீஷ் மற்றும் உபயதாரர்கள் கலந்து கொண்டனர். ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையில் செடல் உற்சவம் நடைபெறுகிறது.


Next Story