கடலூர் அருகே ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் கொதிக்கும் எண்ணையில் கையால் வடைபோட்டு எடுத்து நேர்த்திக்கடன்


கடலூர் அருகே  ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்  கொதிக்கும் எண்ணையில் கையால் வடைபோட்டு எடுத்து நேர்த்திக்கடன்
x

கடலூர் அருகே ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடைபெற்றது. இதில் கொதிக்கும் எண்ணையில் கையால் வடைபோட்டு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினா்.

கடலூர்


நெல்லிக்குப்பம்,

கடலூர் அடுத்த பில்லாலி தொட்டி கிராமத்தில் ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செடல் உற்சவம் கடந்த 2-ந்தேதி கணபதி யாகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் செடல் குத்தி நேர்த்திகடன் செலுத்தினர். அப்போது கிரேனில் தொங்கிய படியும், உடலில் அலகு குத்தி வேன் மற்றும் பஸ்சை கோவிலுக்கு இழுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் கொதிக்கும் எண்ணையில் வடை போட்டு கையால் எடுத்தும் பக்தர்கள் நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவில் அம்மன் வீதிஉலா நடந்தது. விழாவில் இன்று (சனிக்கிழமை) அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்து, கொடி இறக்கும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் இளைஞர்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story