காவிரி பாலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
காவிரி பாலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாநகரத்தில் 230 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய போலீசார் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 3-வது நாளான இன்று(வெள்ளிக்கிழமை) மாலை விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. பெரும்பாலான சிலைகள் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுவது வழக்கம். எனவே திருச்சி காவிரி பாலத்தில் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தை கண்காணிக்க டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, காவிரி பாலத்தில் அதிக எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கமிஷனர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story