பள்ளிக்கூடத்துக்கு இருக்கை வசதி


பள்ளிக்கூடத்துக்கு இருக்கை வசதி
x

பரப்பாடி அருகே பள்ளிக்கூடத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் இருக்கை வசதி செய்து கொடுத்தனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

பரப்பாடி நாம் தமிழர் கட்சி சார்பில் பாப்பான்குளம் டி.டி.டி.ஏ தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இருக்கைகள் மற்றும் மேஜைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பரப்பாடி நகர தலைவர் ரமேஷ், கட்சி நிர்வாகிகள் நெல்லை ஜெயசீலன், ஜேக்கப் பாக்கியராஜ், மோசஸ், நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் முருகப்பெருமாள், பாப்பான்குளம் செயலாளர் ரமேஷ்முருகன், பள்ளி ஆசிரியர்கள் மெர்சிபெர்லின், ஜான்சாமுவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பரப்பாடி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் மெகுலன் ராசா செய்து இருந்தார்.


Next Story