மாயமான மீனவரை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி


மாயமான மீனவரை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாயமான மீனவரை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

ராமநாதபுரம்

கீழக்கரை,

கீழக்கரை அருகே பாரதி நகர் கடற்கரையில் இருந்து கடந்த 9-ந் தேதி பாரதிநகர் முனியசாமி(வயது 50), முருகேசன், குமார், விவேகானந்தபுரம் ஆனந்த், முனியராஜ், முத்து கருப்பன், செல்வம் உள்பட 11 மீனவர்கள் நாட்டு படகில் அப்பா தீவு அருகில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது திடீரென்று முனியசாமி நடுக்கடலில் மாயமானார். அவரை தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மற்ற மீனவர்களும் கரை திரும்பி இதுகுறித்து கடலோர காவல் படையினரிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் அவச காலங்களில் உதவக்கூடிய படகுகள் இல்லாததால் அவர்கள் மற்றும் மீனவர்கள் நாட்டு படகில் மீண்டும் கடலுக்குள் சென்று தேடினர். ஆனாலும் முனியசாமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதை தொடர்ந்து உச்சிப்புளியில் உள்ள கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மாயமான மீனவர் முனியசாமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவருடைய குடும்பத்தினர் கவலையுடன் கடற்கரையில் காத்து கிடக்கின்றனர். கீழக்கரை முதல் ஏர்வாடி வரை ஏராளமான மீனவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர காவல் படையினரிடம் அவசர காலங்களில் உதவக்கூடிய படகு இல்லாதது மீனவர்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story