பழக்கடைக்கு 'சீல்' வைப்பு


பழக்கடைக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 18 Oct 2023 1:15 AM IST (Updated: 18 Oct 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் பழக்கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தேனி

கம்பத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராகவன் தலைமையில் ஓட்டல்கள், வாரச்சந்தை, பேக்கரி மற்றும் பழக்கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது கம்பம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான பழக்கடையை அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த கடையில் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் இல்லாமலும், சுகாதாரமற்ற முறையில் பழங்கள் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனோ பழக்கடையை பூட்டி 'சீல்' வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று, போலீஸ் பாதுகாப்புடன் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மணிமாறன், சுரேஷ்கண்ணன் ஆகியோர் நேரில் சென்று பழக்கடையை பூட்டி 'சீல்' வைத்தனர்.


Next Story