அனுமதி இன்றி செயல்பட்ட இறால் கம்பெனிக்கு 'சீல்'


அனுமதி இன்றி செயல்பட்ட இறால் கம்பெனிக்கு சீல்
x

ராமேசுவரம் வடகாடு கிராமத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட இறால் கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

ராமேசுவரம் வடகாடு கிராமத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட இறால் கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது.

சீல் வைப்பு

ராமேசுவரத்தில் வடகாடு கிராமத்தில் இருந்து பாசி சேகரிப்பதற்காக கடலுக்கு சென்று வந்த மீனவ பெண் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மீனவ பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்த வந்த ராமேசுவரம் வடகாடு பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த ஹாஜத்து பீவி என்பவருக்கு சொந்தமான இறால் கம்பெனியை நேற்று வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தீக்குளிக்க முயன்ற பெண்

மேலும் ராமேசுவரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது அந்த போராட்டத்தில் அமர்ந்திருந்த பாதிக்கப்பட்ட இறந்துபோன பெண்ணின் மகள் ஒருவர் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story