புகையிலை விற்பனை செய்த கடைக்கு 'சீல்' வைப்பு
புகையிலை விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சசிதீபா ஆகியோர் உத்தரவுப்படி சிவந்திப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் சம்பவத்தன்று கிருஷ்ணாபுரம் பகுதியில், புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கிருஷ்ணாபுரம் கலைக்கோயில் நகரில் உள்ள ஒரு கடையில் வேலாயுதம் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதை கண்டுபிடித்தனர். அவரது கடையில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் போலீசார் முன்னிலையில், டாக்டர் சசிதீபா அந்த கடைக்கு நேற்று 'சீல்' வைத்தார்.
Related Tags :
Next Story