மனைவியுடனான கள்ளக்காதலை கண்டித்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு
மனைவியுடனான கள்ளக்காதலை கண்டித்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருவெறும்பூர்:
கள்ளக்காதல்
திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பரமசிவம்(வயது 27). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் பரமசிவத்தின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த குமார் என்ற மகேஷ்குமார் அடிக்கடி பரமசிவம் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கும், மகேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
அரிவாள் வெட்டு
இது பற்றி அறிந்த பரமசிவம், தனது மனைவியை கண்டித்துள்ளார். அதேபோல் மகேஷ்குமாரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பரமசிவத்தின் வீட்டிற்கு வந்த மகேஷ்குமார், அரிவாளால் பரமசிவத்தின் ைகயில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் பரமசிவத்தை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசில் பரமசிவம் புகார் செய்தார். அதன்பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ்குமாரை தேடி வருகின்றனர்.