தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு


கருங்குளத்தில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி பகுதியை சேர்ந்த முத்தையா மகன் சுடலைமுத்து (வயது 42). இவரது நண்பர்கள் தாதன்குளம் பகுதியை சேர்ந்த தளவாய் மகன் முருகன் (25), நெல்லை திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து மகன் மாயாண்டி (எ) மாயா (19), ஸ்ரீவைகுண்டம் மேலக்கோட்டை வாசல் தெருவை சேர்ந்த பிச்சைபாண்டி மகன் அம்மமுத்து (38) மற்றும் வல்லநாடு மணக்கரை பகுதியை சேர்ந்த தேவபிரான் (எ) மாயா மகன் பார்வதிநாதன் (24) ஆகியோர் கருங்குளம் பஸ்நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் வெட்டி உள்ளனர். அவர் வெட்டுக்காயங்களுடன் உயிர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ெசன்று சுடலைமுத்து, முருகன், மாயாண்டி (எ) மாயா, அம்மமுத்து மற்றும் பார்வதிநாதன் ஆகிய 5 பேரையும் பிடித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். இதில் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே முருகன் மீது 7 வழக்குகளும், சுடலைமுத்து மீது ஒரு வழக்கும், மாயாண்டி (எ) மாயா மீதுஒருவழக்கும், பார்வதிநாதன் மீது முறப்பநாடு மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய காவல் நிலையங்களில்7 வழக்குகளும், அம்மமுத்து மீது ஸ்ரீவைகுண்டம் மற்றும் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஆகிய காவல் நிலையங்களில் 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story