பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
ஆழ்வார்குறிச்சி அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
தென்காசி
கடையம்:
பொட்டல்புதூர் புதுத்தெருவைச் சேர்ந்த பச்சாத்து என்பவருடைய மகன் பேச்சிமுத்து (வயது 48). இவர் ஆழ்வார்குறிச்சி அருகே பரும்பு கிராமத்தில் உள்ள 3½ சென்ட் இடத்தை பரும்பு கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு விற்றதாக கூறப்படுகிறது.
தற்போது பேச்சிமுத்து, தனது இடத்தை உனக்கு விற்கவே இல்லை என்று கூறி ஈஸ்வரனிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரனின் மனைவி மகேஸ்வரி அந்த இடத்தை பாபு என்பவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பேச்சிமுத்து, மகேஸ்வரியை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த மகேஸ்வரி தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story