என்ஜினீயருக்கு அரிவாள் வெட்டு; பொதுமக்கள் சாலைமறியல்


என்ஜினீயருக்கு அரிவாள் வெட்டு; பொதுமக்கள் சாலைமறியல்
x

பேட்டையில் என்ஜினீயருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.

திருநெல்வேலி

பேட்டை:

பேட்டை ரகுமான் பேட்டை 1-வது தெருவை சேர்ந்தவர் ஜலாலுதின் மகன் முகமது பீர்கான் (வயது 23). சிவில் என்ஜினீயரான இவர் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 பேர் கொண்ட கும்பலை, மெதுவாக செல்லும்படி முகம்மது பீர்கான் கூறியுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே அந்த கும்பல் அரிவாளால் முகமதுபீர்கானை வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இதில் காயமடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பேட்டை முனிசிபாலிட்டி பஸ்நிறுத்தம் அருகே, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற 3 பேரையும் தேடி வருகிறார்.


Next Story