சொத்து தகராறில் பெற்றோருக்கு அரிவாள் வெட்டு


சொத்து தகராறில் பெற்றோருக்கு அரிவாள் வெட்டு
x

களக்காடு அருகே சொத்து தகராறில் பெற்றோரை அரிவாளால் வெட்டிய விவசாயி கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே சொத்து தகராறில் பெற்றோரை அரிவாளால் வெட்டிய விவசாயி கைது செய்யப்பட்டார்.

சொத்து தகராறு

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள வடக்கு புளியங்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 72). இவரது மனைவி ஆறுமுகத்தம்மாள் (65). இவர்களுக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

இசக்கிமுத்து தனக்கு சொந்தமான நிலம் மற்றும் வயலை அனைவருக்கும் பிரித்து கொடுத்து விட்டார். ஆனால் இந்த சொத்தை பிரித்ததில் இசக்கிமுத்துவுக்கும், அவரது மகன் விவசாயியான சுடலைக்கண்ணுவுக்கும் (42) தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அரிவாள் வெட்டு- கைது

இந்த நிலையில் நேற்று இசக்கிமுத்து வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுடலைக்கண்ணு தனது தந்தை இசக்கிமுத்துவை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டியதாகவும், இதை தடுக்க வந்த ஆறுமுகத்தம்மாளை வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டலும் விடுத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுடலைக்கண்ணுவை கைது செய்தார்.


Next Story