தந்தை- மகனுக்கு அரிவாள் வெட்டு


தந்தை- மகனுக்கு அரிவாள் வெட்டு
x

பாளையங்கோட்டையில் தந்தை- மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் தந்தை- மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.

பணப் பிரச்சினை

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அண்ணாநகர் அன்னை இந்திராநகரை சேர்ந்தவர் கிட்டு என்ற கிருஷ்ணன் (வயது 50). விவசாயி. இவரின் மகன் தானு (18). கல்லூரி மாணவர். அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகத்தாய். இவரும், கிட்டு என்ற கிருஷ்ணனும் உறவினர்கள். இவர்களுக்குள் பணம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சண்முகத்தாயின் மருமகனான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்த தோல் முட்டைக்குமார் (28) என்பவர் நேற்று சண்முகத்தாயின் வீட்டுக்கு வந்தார். அப்போது இந்த பிரச்சினை குறித்து சண்முகத்தாய் தனது மருமகனிடம் கூறினார்.

அரிவாள் வெட்டு

இதனால் தோல்முட்டைக்குமார் ஆத்திரம் அடைந்து கிட்டு என்ற கிருஷ்ணன், அவரின் மகன் தானு ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற தோல்முட்டைக்குமாரை தேடி வருகின்றனர். தோல் முட்டைக்குமார் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story