விண்ணப்பித்தவர்களின் கோரிக்கை விவரங்களை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


விண்ணப்பித்தவர்களின் கோரிக்கை விவரங்களை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x

விண்ணப்பித்தவர்களின் கோரிக்கை விவரங்களை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ஏற்கனவே நடைபெற்ற வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டன. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9,847 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 2,394 விண்ணப்பங்களும், திருத்தம் செய்தல் தொடர்பாக 3,926 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11,179 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 2,475 விண்ணப்பங்களும், திருத்தம் செய்தல் தொடர்பாக 2,988 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பணிகளின் உண்மை தன்மை குறித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் வள்ளலார் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், இரூர் ஆகிய பகுதிகளிலும், அரியலூர் மாவட்டத்தில் கல்லங்குறிச்சி, கோப்பிலியங்குடிகாடு ஆகிய பகுதிகளிலும் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் அவர் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகங்களில் நடந்த சிறப்பு சுருக்க திருத்த முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி, அவர்களது விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இப்பணியை தாசில்தார்கள் தனி கவனம் செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திட தேவையான நடவடிக்கைகளை வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும், என்றார். அப்போது மாவட்ட கலெக்டர்கள் ஸ்ரீவெங்கடபிரியா (பெரம்பலூர்), ரமணசரஸ்வதி (அரியலூர்) ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story