வாக்காளர் திருத்த பட்டியல் குறித்த ஆய்வு கூட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் திருத்த பட்டியல் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் திருத்த பட்டியல் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
ஆய்வு கூட்டம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு கடந்த 8-ந் தேதி வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு இன்று (வியாழக்கிழமை) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2023 தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனருமான ஷோபனா தலைமை தாங்கினார்.
படிவங்கள்
கூட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2023-ல் பெறப்பட்ட படிவங்கள் முடிவு செய்தது குறித்தும், புதிய வாக்காளர்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தது குறித்தும், அதிகப்படியான இறந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும், சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2023 -ல் பெறப்பட்ட படிவங்கள் இறுதி செய்யப்பட்டது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர்கள் சரண்யா, சவும்யா, தணிகாசலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சரவணன், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்களார் பதிவு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.