கொளுத்தும் வெயில்... சென்னையில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு


கொளுத்தும் வெயில்... சென்னையில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு
x

பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் கட்டிட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 4-ந்தேதி கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், பல பகுதிகளில் வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் இருந்துவரும் நிலையில், கட்டிட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் அதிக வெப்பத்தால் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிக வெப்பம் காரணமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து வகை திறந்தவெளி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் மதுரையில் மேற்கண்ட நேரத்தில் எந்த வகையான திறந்தவெளி கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெயிலில் தொழிலாளர் உடல்நலன் பாதிக்கப்படுவதை தடுக்க தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குநர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதன் மூலம் சுட்டெரிக்கும் வெயிலால் கட்டுமான தொழிலாளர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மே மாதம் இறுதி வரை திறந்தவெளி கட்டுமான பணி நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.


Next Story