பள்ளியில் அறிவியல் கண்காட்சி
பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பெரம்பலூர்
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வயலப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை காட்சிப்படுத்துதல் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்சிக்கு வேப்பூர் வட்டாரக்கல்வி அலுவலர் சாந்தப்பன் தலைமை தாங்கினார். வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் முன்னிலை வகித்தார். அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் வரவேற்றார். இதில் பல்வேறு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சிறப்பு அழைப்பாளர்கள் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர். அறிவியல் கண்காட்சியில் அனைவருக்கும் உயரம், எடை, ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு, நாடித்துடிப்பு ஆகியவற்றை மாணவர்கள் உரிய உபகரணங்கள் மூலம் கண்டறிந்து அட்டையில் குறித்துக் கொடுத்தனர்.
Related Tags :
Next Story