பள்ளியில் அறிவியல் கண்காட்சி


பள்ளியில் அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி மேலாளர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். விஸ்வகர்ம மகாஜன சங்க துணை தலைவர் சண்முகவேல் குத்துவிளக்கு ஏற்றினார். கண்காட்சியில் பள்ளி மாணவ-மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதமாக சந்திராயன், எரிமலை, காற்றாலை, பசுமை வீடு, 3டி, சோலார் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேஸ்வரி, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் மாடசாமி, துணை செயலாளர் அந்தோணி ராஜ், நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்து, ஆறுமுகம், சிங்காரவேல், முனியசாமி, விஸ்வகர்ம தொழிலாளர் சங்க செயலாளர் மாரிமுத்து ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story