அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
குமாரபாளையம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
நாமக்கல்
குமாரபாளையம்:
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனை உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பராஜ் தொடங்கி வைத்தார். இதில் 6 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். இதில் நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் கருவி, தண்ணீரை சிக்கனமாக விவசாயத்திற்கு பாசனம் செய்யும் முறை மாதிரி, ஆம்புலன்சுக்கு வழி விடும் தானியங்கி வேகத்தடை, மலைப்பகுதியில் விபத்தை தவிர்க்க தானியங்கி எச்சரிக்கை விளக்கு உள்ளிட்ட 50 படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்த கண்காட்சியை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story