பிளஸ்-2 பொதுத்தேர்வில் பள்ளிகள் தேர்ச்சி விகிதம்


பிளஸ்-2 பொதுத்தேர்வில் பள்ளிகள் தேர்ச்சி விகிதம்
x

கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் பள்ளிகள் பெற்ற தேர்ச்சி விகிதம் விவரம் வருமாறு:-

கரூர்

92.37 சதவீதம் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டன. அதன்படி கரூர் மாவட்டம் 92.37 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 33 மாணவர்கள், 26 மாணவிகள் என மொத்தம் 59 பேர் தேர்வு எழுதினர். இதில் 24 மாணவர்கள், 26 மாணவிகள் என 50 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 84.75 சதவீதமாகும்.

அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 233 மாணவர்கள், 687 மாணவிகள் என 920 பேர் தேர்வு எழுதினர். இதில் 214 மாணவர்கள், 679 மாணவிகள் என 893 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.07 சதவீதமாகும்.

அரசு மேல்நிலைப்பள்ளிகள்

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2 ஆயிரத்து 216 மாணவர்கள், 2 ஆயிரத்து 645 மாணவிகள் என மொத்தம் 4 ஆயிரத்து 861 பேர் தேர்வு எழுதினர். இதில் 1,791 மாணவர்கள், 2 ஆயிரத்து 434 மாணவிகள் என 4 ஆயிரத்து 225 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 86.92 சதவீதமாகும்.

நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 158 மாணவர்கள், 156 மாணவிகள் என மொத்தம் 314 பேர் தேர்வு எழுதினர். இதில் 113 மாணவர்கள், 142 மாணவிகள் என மொத்தம் 255 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 81.21 சதவீதமாகும்.

பகுதி உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 186 மாணவர்கள், 107 மாணவிகள் என மொத்தம் 293 பேர் தேர்வு எழுதினர். இதில் 176 மாணவர்கள், 98 மாணவிகள் என 274 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.52 சதவீதமாகும்.

தனியார் பள்ளிகள்

தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் 1,468 மாணவர்கள், 1,371 மாணவிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 839 பேர் தேர்வு எழுதினர். இதில் 1,456 மாணவர்கள், 1,366 மாணவிகள் என 2 ஆயிரத்து 822 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 99.40 சதவீதமாகும்.

சுயநிதி (டி.எஸ்.இ.) மேல்நிலைப்பள்ளிகளில் 540 மாணவர்கள், 419 மாணவிகள் என மொத்தம் 959 பேர் தேர்வு எழுதினர். இதில் 531 மாணவர்கள், 413 மாணவிகள் என 944 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 98.44 சதவீதமாகும்.


Next Story