பிளாஸ்டிக் இல்லாமல் பராமரிக்கப்படும் பள்ளி, கல்லூரிகள் 'மஞ்சப்பை' விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு


பிளாஸ்டிக் இல்லாமல் பராமரிக்கப்படும் பள்ளி, கல்லூரிகள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
x

பிளாஸ்டிக் இல்லாமல் பராமரிக்கப்படும் பள்ளி, கல்லூரிகள் ‘மஞ்சப்பை' விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை

சென்னை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு 'மஞ்சப்பை' விருது வழங்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அறிவித்தார். இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3-ம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க மே 1-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story