திங்கள்சந்தை அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி


திங்கள்சந்தை அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
x

திங்கள்சந்தை அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியானார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

திங்கள்சந்தை அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியானார்.

டெங்கு காய்ச்சல் பரவல்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறையினர் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கென்று தனி வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர வீடு, வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் குமரி மாவட்டத்திலும் சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் மர்ம காய்ச்சலுக்கு ஒரு பள்ளி மாணவன் பலியான சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

மாணவன் பலி

திங்கள்சந்தை அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 45). இவருடைய மகன் ஆதித்யா (16) மாங்குழி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் நெய்யூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீகுமார் அளித்த புகாரில் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story