பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
குமாரபாளையம் அருகே பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல்
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் மு.செல்வி வரவேற்றார். இக்கூட்டத்தில் பள்ளிக்கூடத்திற்கு வரும் வழியில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி சீர்படுத்திதர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஆணையாளர் ஆகியோரை கேட்டுக் கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விடியல் ஆரம்பம் அமைப்பின் தலைவர் பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் மணி செல்வம், தட்டாங்குட்டை வார்டு உறுப்பினர் நாகராஜ் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை ராதா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story