பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
x

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குழு தலைவர் மனோரஞ்சிதம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டில் அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் தொப்பம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். 5 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்த்து கொள்ளுதல், மாணவ-மாணவிகளின் நலன் கருதி கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டி தர வேண்டும். மேலும் பழுதடைந்த வகுப்பறை கட்டிடங்களை பழுதுபார்த்து கொடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story