பள்ளி மாணவி பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் மீது வழக்கு


பள்ளி மாணவி பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் மீது வழக்கு
x

மூலைக்கரைப்பட்டி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த கார் டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கீழ சிந்தாமணியை சேர்ந்தவர் தைநேஸ் மரியான் மகன் தைநேஸ் செல்வன் (வயது 30). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுள்ளார். தற்போது 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். முதல் மனைவிக்கு ஒரு குழந்தையும், 2-வது மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளிக்கூட மாணவி வீட்டுக்குள் ஆள் இல்லாத நேரத்தில் அத்துமீறி நுழைந்து அந்த மாணவியிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த மாணவி சத்தம் போடவும் தைநேஸ் செல்வன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

பின்னர் அந்த மாணவி நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் நாககுமாரி விசாரணை நடத்தி தைநேஸ் செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்.


Next Story