பள்ளி மாணவி சாதனை


பள்ளி மாணவி சாதனை
x
தினத்தந்தி 14 May 2023 12:30 AM IST (Updated: 14 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் கோவில்பட்டி பள்ளி மாணவி சாதனை படைத்தார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷரம் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற்றனர். 12-ம் வகுப்பு தேர்வில் மாணவி லட்சுமி துர்கா 500-க்கு 492 மதிப்பெண்கள் பெற்று சென்னை மண்டலத்தில் சிறப்பிடமும், தென் தமிழகத்தில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். 10-ம் வகுப்பு தேர்வில் மாணவி சேதுவர்ஷினி 600-க்கு 580 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், லக்க்ஷனா 566 மதிப்பெண் எடுத்து 2-வது இடமும், கார்த்திகா 558 மதிப்பெண் பெற்று 3-வது இடமும், பிரியதர்ஷினி 550 மதிப்பெண் பெற்று 4-வது இடமும் பிடித்தனர். சாதனை படைத்த மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் பா.விஜயகுமார் பரிசு வழங்கி பாராட்டினார்.


Next Story