தேசிய அபாகஸ் ஒலிம்பியாட் போட்டியில் பள்ளி மாணவி சாதனை
தேசிய அபாகஸ் ஒலிம்பியாட் போட்டியில் இடைகால் பள்ளி மாணவி சாதனை படைத்தார்.
கடையநல்லூர்:
சென்னையில் தேசிய அபாகஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 2,500-க்கும் அதிகமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கடையநல்லூர் இடைகால் குளோபல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் இருந்தும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
4-ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் குளோபல் பள்ளி மாணவி குணமீராள் முதல் பரிசுக்கு நிகரான பரிசு பெற்றாள். வேகமாக கணக்குகளை செய்ததற்கும், மேடையில் நன்றாக செய்து காண்பித்ததற்காகவும் முதல் பரிசை மிகமிக குறைவான நொடிகளில் இழந்ததற்காகவும் இப்பரிசு வழங்கப்பட்டது.
இப்பரிசு பெற்று சாதனை படைத்த மாணவியை இந்தியன் அபாகஸ் நிறுவனம் கவுரவித்து பாராட்டினார்கள். சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியை ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர் சரளா, பள்ளி முதல்வர் அந்தோணி பால்ராஜ் மற்றும் தாளாளர் ஷேக் உதுமான் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.