பள்ளி வகுப்பறை, துணை சுகாதார நிலைய கட்டிட பணிகள் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு


பள்ளி வகுப்பறை, துணை சுகாதார நிலைய கட்டிட பணிகள் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு
x
தினத்தந்தி 30 Aug 2023 12:45 AM IST (Updated: 30 Aug 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே பள்ளி வகுப்பறை, துணை சுகாதார நிலைய கட்டிட பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.

திருவாரூர்

நன்னிலம் அருகே பள்ளி வகுப்பறை, துணை சுகாதார நிலைய கட்டிட பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.

கட்டுமான பணிகள்

நன்னிலம் அருகே உள்ள பனங்குடி ஊராட்சியில் ரூ.33.72 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தையும், பள்ளியில் காலை உணவு வழங்கப்படுவதையும் கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முடிகொண்டான் ஊராட்சியில் ரூ.37.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.643.85 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருமலைராஜன் பாலம் - செருவளூர் சாலை பணிகள், பூந்தோட்டம் பகுதியில் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணி உள்ளிட்டவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார்.

விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

திருமீயச்சூரில் குளம் தூர்வாரப்பட்டுள்ளதையும், நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டுமான பணிகளையும், போழக்குடி நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டிட பழுதுகளை சரி செய்யும் பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

அப்போது வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானகிருஷ்ணரமேஷ், ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story