கேமரா பொருத்தாத பள்ளி வாகனங்கள் பறிமுதல்
கல்வி நிறுவன வாகனங்களின் உள்ளேயும், வெளியேயும் முன் பின் பக்கங்களில், கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லைஎன்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.
கல்வி நிறுவன வாகனங்களின் உள்ளேயும், வெளியேயும் முன் பின் பக்கங்களில், கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லைஎன்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.
பள்ளிகள் திறப்பு
தமிழகம் முழுவதும் வருகிற 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. பள்ளி வாகன விபத்துகள் நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப் பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. பள்ளி வாகன பராமரிப்பு, மேலாண்மை குறித்து, பள்ளி முதல்வர், மேற்பார்வையாளர், விளையாட்டு அலுவலர்களிடம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பள்ளிதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் கூறியதாவது:- பள்ளி வாகனத்தின் முன்னும், பின்னும் உள்ள கேமராக்கள், ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள், தீயணைப்பான்கள், முதலுதவிப்பெட்டி, அவசரகால வழி, பள்ளி மாணவர்கள் ஏறி இறங்கும் படிக்கட்டுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. ஆய்வின்போது பல பள்ளி வாகனங்களில் கேமரா பொருத்தப்படாமல் இருந்தது. அந்தப் பள்ளி வாகனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேமரா
மேலும் வருகிற 12-ந் தேதிக்குள் அனைத்து பள்ளி வாகனங்களிலும் கட்டாயமாக கேமரா பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் கேமரா குறித்து கடந்த ஒரு வருடமாக பள்ளி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். அதில் பலரும் பள்ளி வாகனங்களில் பொருத்தப்படும் கேமரா கிடைக்கவில்லை என்று காலம் தாழ்த்தி வந்தனர். அதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது. தற்போது மீண்டும் கேமரா பயன்படுத்தப்படாமல் வாகனங்களை இயக்கினால் பள்ளி வாகனம் வட்டார போக்குவரத்து சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.