மின்வேலியில் சிக்கி உயிரிழந்த விவசாயியின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை


மின்வேலியில் சிக்கி உயிரிழந்த விவசாயியின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீரகேரளம்புதூர் அருகே மின்வேலியில் சிக்கி உயிரிழந்த விவசாயியின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

தென்காசி

ஆலங்குளம்:

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன். விவசாயி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். இவர்களின் கல்விக்கு உதவி கேட்டு நாடார் மகாஜன சங்க தென் மண்டல செயலாளர் மதன் சுப்பிரமணியனிடம் முறையிட்டனர். இதையடுத்து அவர், நாடார் மகாஜன சங்க செயலாளர் கரிக்கோல் ராஜ்க்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் சங்கத்தின் மூலமாக குழந்தைகளின் கல்வி உதவித் தொகையாக வங்கியில் ரூ.55 ஆயிரம் நிரந்தர வைப்புத்தொகை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பழனி நாடார் எம்.எல்.ஏ., கஜேந்திரன் குடும்பத்தினரிடம் கரிக்கோல் ராஜ் நாடார் முன்னிலையில் கல்வி உதவித்தொகைக்கான காசோைலயை வழங்கினார்.

கீழக்கலங்கல் காமராஜர் சிலை முன்பு நடந்த இ்ந்நிகழ்ச்சியில் தென் மண்டல தலைவர் சுப்பிரமணிய நாடார், ரத்தினசாமி நாடார், காமராஜ் நாடார், ஆலங்குளம் யூனியன் துணை தலைவர் செல்வக்கொடி ராஜமணி, பஞ்சாயத்து தலைவர் சந்திரசேகர் மற்றும் ஊர் பெரியோா்கள், ஊர் நாட்டாண்மைகள் மனோகர சுந்தரதாஸ், மனோகரன், வெள்ளத்துரை, வேல்சாமி நாடார், நாடக கலைஞர் பொன்னுத்துரை, முத்துக்குமார், சீனித்துரை, கண்ணன், மணிக்குட்டி, தங்கராஜ், தினகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story