தமிழக அரசின் திட்டங்கள் தேசிய அளவில் முன்மாதிரியாக உள்ளன


தமிழக அரசின் திட்டங்கள் தேசிய அளவில் முன்மாதிரியாக உள்ளன
x

தமிழக அரசின் திட்டங்கள் தேசிய அளவில் முன்மாதியாக உள்ளன என்று அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறினார்.

சிவகங்கை

காரைக்குடி,

தமிழக அரசின் திட்டங்கள் தேசிய அளவில் முன்மாதியாக உள்ளன என்று அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறினார்.

சான்றிதழ்

காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் பிரதமர் மந்திரி ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் மற்றும் சிறப்பாக பணி புரிந்த மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்களுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மது சூதன் ரெட்டி தலைமை தாங்கினார். தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு சான்றி தழ்களை வழங்கி பேசினார்.

முன்மாதிரி

அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் செயல் படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும் அனைத்து தரப்பு மக்களும் பாராட்டு வண்ணம் உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டமும் சம வளர்ச்சி பெறுவதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக முதல்-அமைச்சர் ஏழை எளிய மக்களின் நலன் காக்கின்ற வகையில் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் பல்வேறு மருத்துவம் சார்ந்த திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார்.

தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் தேசிய அளவில் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூலம் 13 அரசு மருத்துவமனைகள் மற்றும் 16 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை

கடந்த ஒரு வருடத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 8 ஆயிரத்து 53 பயனாளிகளுக்கு ரூ. 8 கோடியே 88 லட்சத்து 72 ஆயிரத்து 675 மதிப்பீட்டில் சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளது.

இதனை பொதுமக்கள் முறையாக அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாங்குடி எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் முத்துத்துரை, மருத்துவத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், நகர்மன்ற துணைத் தலைவர் குணசேகரன், நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நாகனி செந்தில்குமார், காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story