சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு: காவல் ஆய்வாளர் ஜாமீன் மனு தள்ளுபடி


சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு: காவல் ஆய்வாளர் ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 15 Sept 2023 3:22 PM IST (Updated: 15 Sept 2023 3:33 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசாரை சி.பி.ஐ. கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்தநிலையில், சாத்தான்குளம் வழக்கில் ஜாமீன்கோரி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ, ஜெயராஜின் மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


Next Story