சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு


சாத்தான்குளம் இரட்டைக்கொலை  வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
x

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

மதுரை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு, போலீசாரால் தாக்கப்பட்டு பரிதாபமாக இறந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் கொலை வழக்குபதிவு செய்து, விசாரிக்கின்றனர். இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் கைதாகி சிறையில் உள்ளனர். இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் சாட்சிகள் ஆஜராகாததால் இந்த வழக்கை வருகிற 22-ந்தேதிக்கு(வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.


Next Story