வறண்டு கிடக்கும் மேலச்ெசல்வனூர் பறவைகள் சரணாலயம்


வறண்டு கிடக்கும் மேலச்ெசல்வனூர் பறவைகள் சரணாலயம்
x

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை தண்ணீர் வரும் பாதை அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் சாயல்குடி அருகே உள்ள மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயம் வறண்டு காட்சி அளிக்கிறது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை தண்ணீர் வரும் பாதை அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் சாயல்குடி அருகே உள்ள மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயம் வறண்டு காட்சி அளிக்கிறது.

சரணாலயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே மேலச் செல்வனூர் முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி, காஞ்சி ரங்குளம் மற்றும் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாய், தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன.இந்த பறவைகள் சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கிய பின்னர் நவம்பர் மாதத்தில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கும்.

கடந்த 1998-ல் மேலச்செல்வனூர் நீர் நிலை பறவைகள் சரணாலயமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கிய பின்னர் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் சாம்பல் நிற கூழைக்கடா, சங்குவளை நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், மஞ்சள் அரிவாள் மூக்கன், கரண்டிவாயன் மற்றும் பல வெள்ளை கொக்குகள். வாத்துக்கள் என ஏராளமான பறவைகள் வரும்.

இவ்வாறு வரும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து மீண்டும் குஞ்சுகளுடன் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் திரும்பி சென்று விடும். தற்போது மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருகிறது. இதனால் தற்போது பறவைகள் சரணாலயத்தில் ஒரு பறவைகள்கூட இல்லாமல் சரணாலயத்தில் உள்ள மரக்கிளைகள் அனைத்தும் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன.

சாயல்குடி மேலச்ெசல்வனூர் பறவைகள் சரணாலயத்தில் இந்த ஆண்டு அதிக அளவு தண்ணீர் இல்லாததால் மிகக் குறைந்த அளவிலான பறவைகள் வந்திருந்தன. அதுவும் தற்போது தண்ணீர் முழுமையாக வறண்டுவிட்டது.

வைகையில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு அதிக அளவில் உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

நடவடிக்கை

இதில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் வந்து பெரிய கண்மாய் சட்டர் பகுதியில் இருந்து சக்கரகோட்டை கண்மாய் மற்றும் நகரின் பல்வேறு கண்மாய், ஊருணி களையும் நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனவே வறண்டு காணப்படும் சாயல்குடி மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்திற்கு வைகை தண்ணீர் வந்து சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த கிராம மக்களின் கோரிக்கை மற்றும் விருப்பமாகும்.

வரப்பிரசாதம்

மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்திற்கு வைகை தண்ணீர் கொண்டுவரப்படும் பட்சத்தில் அனைத்து சீசனிலும் இங்கு பறவைகள் இருப்பதோடு மட்டுமல்லாமல் மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கும் இது ஒரு மிக வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


Next Story