சப்த கன்னிமார்- உதிர கருப்பு சாமி கோவில் கும்பாபிஷேகம்
சப்த கன்னிமார்- உதிர கருப்பு சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி
திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் கிராமத்தில் சப்த கன்னிமார் மற்றும் உதிர கருப்பு சாமி கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக காலை 9.30 மணி அளவில் கோமாதா பூஜை மற்றும் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிவனடியார்கள், சுற்றுவட்டார மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கூத்தைப்பார் முதற்கரை பாண்டுரார் வகையறாக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story