அரசு பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள்


அரசு பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிரிதிவிமங்கலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் மணிமொழி முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் தமிழரசி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 200 மரக்கன்றுகளை வழங்கினார். தொடர்ந்து இளம் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் சைக்கிளில் பேரணியாக சென்று பொதுமக்களிடம் மரங்களை வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி பேசினர். நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் தமிழரசன், ஆசிரியர்கள் முருகன், மகேஸ்வரி, அமிர்தவல்லி, ஜார்ஜ் வினோ, ராமகிருஷ்ணன், தன்னார்வலர்கள் கருணாநிதி, முத்துக்குமார் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Next Story