மரக்கன்று நடும் நிகழ்ச்சி


மரக்கன்று நடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை பகவான் சத்யசாய் பாபா சேவா சமிதி சார்பில் சாய்பாபாவின் பிறந்தநாளை முன்னிட்டு முத்துசாமி பூங்காவில மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நகரசபை தலைவர் ராமலட்சுமி தலைமை தாங்கி, 97 மூலிகை மரக்கன்றுகளை பூங்கா வளாகத்தில் நட்டினார். காப்பாளா் தேவேந்திரன், கன்வீனா் சுப்பிரமணி, சிவசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு பிரட், பிஸ்கட், பழங்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டது. ஏழை, எளிய, ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.




Next Story