நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
கரூர்
சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் அனைத்து நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் 62 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் செய்திருந்தார்.
Related Tags :
Next Story