மரக்கன்று நடும் விழா
மரக்கன்று நடும் விழா
சிவகிரி:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கோட்ட வன அலுவலர் சாகுல் ஹமீது உத்தரவின்பேரில், புளியங்குடி சமூக வனச்சரகர் சீனிவாசன் பரிந்துரையின் பேரில், தேவிபட்டணம் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேவிபட்டணம் பஞ்சாயத்து தலைவரும், வழக்கறிஞருமான ராமராஜ், வாசுதேவநல்லூர் பிரிவு வனவர் மற்றும் சிவகிரி பிரிவு கூடுதல் வனவர் மாரித்தங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். பஞ்சாயத்து துணைத்தலைவர் மாடசாமி முன்னிலை வகித்தார். சுவஜல்தாரா குடிநீர் திட்டத்தின் கமிட்டி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், துணைச் செயலாளர் பரமேஸ்வரன், பொருளாளர் பால்த்துரை, கவுன்சிலர்கள் மாடக்கண்ணு, ராமராஜ், தங்கராஜ், கந்தம்மாள், குருசாமி, கோபால், தங்கராஜ், பூங்கோதை, கிரேஸ், கனகஜோதி, முத்துலட்சுமி, முத்துமாரி, தூய்மை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி அருகே தாருகாபுரத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் பஞ்சாயத்து தலைவர் கவிதா, வாசுதேவநல்லூர் பிரிவு வனவர் மற்றும் சிவகிரி பிரிவு கூடுதல் வனவர் மாரித்தங்கம் மற்றும் துணை தலைவர், வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
* நெல்லை வனச்சரக கோட்ட அலுவலர் சாகுல்ஹமீது உத்தரவின்படியும், சங்கரன்கோவில் வனச்சரக அலுவலர் ராஜகோபால் அறிவுரையின்படி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரிவலம்வந்தநல்லூர், மேலநீலிதநல்லூர், தெற்கு சங்கரன்கோவில், மலையாங்குளம், வடக்கு புதூர் ஆகிய பஞ்சாயத்துகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவர்கள் மாரீஸ், பரமசிவன் பொன்னம்மாள், வனச்சரக ஊழியர்கள், அப்பகுதி மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* கீழக்கடையம் பஞ்சாயத்து பழத்தோட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழாவையொட்டி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் எஸ்.பூமிநாத் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டினார். துணைத்தலைவர் விக்டர் சேவியர் துரைசிங், சமூக ஆர்வலர்கள் பொன் பாண்டி, சுப்புகுட்டி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.