மரக்கன்றுகள் நடும் விழா
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் டி.டி.மோட்டூர் ஊராட்சியில் சுதந்திர தின அமுத பெரு விழாவை முன்னிட்டு எனது மண், எனது தேசம், தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் சேர்வைக்காரன்பட்டி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டும், பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக உருவாக்குவோம் என விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்போம் என்று உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.
பின்னர் மேல்பட்டி ஊராட்சியில் காமராஜர் நகர் மலையடிவார பகுதியில் அமிரித் சரோவர் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் தலைமை தாங்கி 75 மரக்கன்றுகளை நட்டார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, எழிலரசி, வட்டார ஆத்மா திட்ட தலைவரும் ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொகளூர் ஜனார்த்தனன், ஊராட்சி மன்ற தலைவர்கள் இளையரசன், அமீலா, மாவட்ட கவுன்சிலர் உத்ரகுமாரி, ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், சுஜாதா, ஊராட்சி துணைத்தலைவர் மனோகரன், ஊராட்சி செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.