சங்கரன்குடியிருப்புபுனித அன்னம்மாள் ஆலய திருவிழா
சங்கரன்குடியிருப்பு புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நடந்தது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே சங்கரன்குடியிருப்பு புனித அன்னம்மாள் ஆலய திருவிழா 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் மாலை அருள்தந்தை ஜோசப் லியோன் தலைமை தாங்கி திருவிழா கொடியேற்றினார்.
திருவிழாவையொட்டி ஆலயத்தில் தினமும் திருப்பலி, நற்கருணை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 9-ம் திருவிழாவான கடந்த நேற்று முன்தினம் மாலையில் அன்னையின் தேர்ப்பவனி நடைபெற்றது. நேற்று கூட்டுத்திருப்பலி, புதுநன்மை வழங்குதல் நடைபெற்றது. மாலை 3மணிக்கு அன்னையின் தேர்ப்பவனி நடந்தது. தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெற்றது.
Related Tags :
Next Story