சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் நுண்கதிர் பிரிவு அலுவலகம்; ராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்


சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் நுண்கதிர் பிரிவு அலுவலகம்; ராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் நுண்கதிர் பிரிவு அலுவலகத்தை ராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.20 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிதாக கணினி மயமாக்கப்பட்ட நுண்கதிர் பிரிவு அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி சுகாதாரத்துறை நல பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் செந்தில்சேகர், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கணினி மயமாக்கப்பட்ட நுண்கதிர் பிரிவு அறையை திறந்து வைத்து எந்திரத்தின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.

அவர் பேசுகையில், "கர்ப்பிணி பெண்களுக்கு முற்றிலும் பயனுள்ள வகையில் தாய் சேய் நல மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், இ.சி.ஜி. உள்ளிட்ட எந்திரங்களுடன் சீமாங் மருத்துவமனை அமைப்பதற்கு முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை முன்னோடி மருத்துவ கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.9 கோடி தமிழக அரசு அறிவித்துள்ளது. சங்கரன்கோவில் மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்ற முயற்சி எடுக்கப்படும்" என்றார்.

இதில் ஒன்றிய செயலாளர் பெரிய துரை, நகர செயலாளர் பிரகாஷ், மருத்துவர்கள் மாரி ராஜ் ஹெப்சிபா, ஜப்சீர், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story