தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்


தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 21 July 2023 12:30 AM IST (Updated: 21 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சியில் 90-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று முன்தினம் சங்கரன்கோவில் மாாதாங்கோவில் தெருவில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர் அலுவலகம் முன்பு வேலைக்கு செல்லாமல் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மாணிக்கம், செல்வின், சின்னத்துரை ஆகியோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை வரை சம்பளம் வழங்கப்படாததால் பணிக்கு செல்லாமல் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் மாலையில் தூய்மை பணியாளர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



Next Story