தூய்மை பணியாளர்கள் போராட்டம்
தென்காசியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
நகராட்சி, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மக்கள் தொகைக்கு ஏற்ப தொழிலாளர்களை அதிகப்படுத்த வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் இவர்கள் முறையிடும் போராட்டம் நடத்தினர். புதிய பஸ்நிலையம் அருகில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்து மனு கொடுப்பதாக அறிவித்து இருந்தனர். ஆனால் போலீசார் அதற்கு அனுமதி மறுத்து நிர்வாகிகள் சிலரை மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல அனுமதித்தனர். அதன்படி நிர்வாகிகள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்த போராட்டத்திற்கு இந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், தமிழரசி, கனகராஜ், முருகேஸ்வரி, சங்கர் குட்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை மாநில தலைவர் சங்கர பாண்டியன் துவக்கி வைத்தார். சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் அய்யப்பன், மாவட்ட பொருளாளர் குருசாமி, பேச்சிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.