தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி சங்க சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூய்மை பணியாளர் வேலையை தனியாருக்கு வழங்கும் அரசாணை 152-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி.ஐ.டி.யு. நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சரவணபெருமாள் மற்றும் மாநகராட்சி நகராட்சி ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ஐவின் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, தினக்கூலி ரூ.750 வழங்க வேண்டும், தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தப்படி தூய்மைப்பணியாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.


Next Story