முத்துமாரியம்மன் கோவிலில் சந்தனக்காப்பு விழா
முத்துமாரியம்மன் கோவிலில் சந்தனக்காப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை
காரையூர் அருகே மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மண்டகபடிதாரர்கள் சார்பில், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து நேற்று 7-ம் மண்டகப்படி தாரரான வருவாய் த்துறை சார்பில் சந்தனக்காப்பு விழா நடைபெற்றது. இதில் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பச்சை நிறமுகத்துடன் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் மேலத்தானியம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியராஜ், கிராம உதவியாளர்கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் எட்டுப்பட்டி கிராமமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story