இளையான்குடி பஸ் நிலைய கட்டுமான பகுதியில் மணல் திருட்டு; ஒருவர் கைது


இளையான்குடி பஸ் நிலைய கட்டுமான பகுதியில் மணல் திருட்டு; ஒருவர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி பஸ் நிலைய கட்டுமான பகுதியில் மணல் திருட்டு; ஒருவர் கைது

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி புதிய பஸ் நிலையத்திற்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு தென்புறத்தில் களிமண் கலந்த மணல் திருடப்பட்டு உள்ளதாக கீழாயூர் வடக்கு குரூப் கிராம நிர்வாக அதிகாரி சேகர், இளையான்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் திருடப்பட்ட மணல் சுமார் 50-க்கும் மேற்பட்ட டிராக்டர் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில் புதிய பஸ் நிலைய கட்டுமான காண்டிராக்டர் மதுரை மாவட்டம் உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த லோகமலை கண்ணன்(வயது 50), சிறுபாலை கிராமத்தைச் சேர்ந்த காண்டிராக்டர் சுப்பிரமணியன்(52) ஆகியோரால் மணல் திருடப்பட்டு உள்ளதாக இளையான்குடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். மேலும் மணல் திருட பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story