மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது


மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது
x

ஆம்பூர் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி கோட்டாட்சியர் பிரேமலதா நேற்று அதிகாலை 3 மணி அளவில் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஆம்பூர் அடுத்த வீரக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மாட்டு வண்டியை நிறுத்தி விசாரித்தார். இதில் அனுமதி இன்றி பாலாற்றில் இருந்து மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை ஓட்டி வந்த நபர் மற்றும் மாட்டு வண்டியை ஆம்பூர் தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தார்.

விசாரைணயில் மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர் ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 43) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.


Next Story