மீண்டும் உப்பு உற்பத்தி பணிகள் தொடக்கம்
மீண்டும் உப்பு உற்பத்தி பணிகள் தொடக்கம்
வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் இங்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரி மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 25 நாட்களுக்கு முன்பு பருவம் தவறி பெய்த கோடை மழையால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக நிறுத்தபட்டது. இதனால் உப்பளத்தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்து வீட்டில் இருந்தனர். தற்போது வேதாரண்யம் பகுதியில் வெயில் சுட்டெரித்து வருவதால் உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்திக்கான பணிகள் மும்முரமாக தொடங்கி உள்ளது. இன்னும் ஒரிரு நாளில் உப்பு எடுக்கும் பணி தொடங்கப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.